புதினாவில் இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் இனி அதை வேஸ்ட் பண்ண மாட்டீங்க…!

புதினாவில் இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் இனி அதை வேஸ்ட் பண்ண மாட்டீங்க…!

புதினாவில்
இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் இனி அதை வேஸ்ட் பண்ண மாட்டீங்க…!நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின், 'ஏ' மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள், புதினா கீரையில் அடங்கியுள்ளன.


சட்னி, ஜூஸ் என, எந்த விதத்தில் பயன்படுத்தினாலும், இதன் பொது குணங்கள் மாறுவதில்லை.


அசைவ உணவு
மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும் சக்தி இதற்குண்டு. ரத்தத்தை
சுத்திகரிக்கிறது; வாய் நாற்றம் மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது; பசியை துாண்டுகிறது; பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளையும் தீர்க்கிறது.


ஆண்மை
குறைவை நீக்கி, முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிப்பதோடு, வாய்வுத் தொல்லையையும் அகற்றுகிறது.


புதினாவை
நீர் விடாமல் அரைத்து, பற்றுப் போட்டால், தசை வலி, நரம்பு வலி, தலை வலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவை
கட்டுப்படுத்துகிறது.


மஞ்சள்
காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும்
சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முகப்பரு, வறண்ட சருமம் உள்ளவர்கள், இதன் சாற்றை முகத்தில் பூசி வர, நல்ல பலன் கிடைக்கும்.


புதினா
கீரையை நிழலில் காய வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க விட்டு, டீக்கு பதிலாக அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


வயிற்றுப்போக்கின்
போது, புதினாக்கீரை துவையலை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சரியாகும். கர்ப்பிணிகளின்
வாந்தியை நிறுத்த, கைகண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.


புதினா
இலையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, இந்த நீரை குடித்தால், மூச்சுத்திணறல் நீங்கும். புதினா, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு இவைகளை கலந்து
கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பொடுகு மறைந்து, கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.


கொஞ்சம்
புதினா இலையை, தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிய கஷாயத்தில், எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், செரிமானக் கோளாறு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுகளில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.


தண்ணீரில்
இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து, சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்த பின், புதினா இலைகளை சேர்த்து மறுபடியும் கொதிக்க விட்டு இறக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம்.


புதினா
இலைகளை வெயிலில் காய வைத்து, அதனுடன் தேவையான அளவு துாள் உப்பு சேர்த்து சலித்து, பாட்டிலில் சேமித்து வைக்கலாம். இந்த பொடியால், தினசரி பல் தேய்த்து வந்தால், வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த நோயும்
வராது. பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் ரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவையும் நீங்கும்.


கடையில்
வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்திய பின், துார எறியும் தண்டுகளை, தொட்டி மண்ணில் ஊன்றி வைக்கலாம்.


இந்த
காயகல்பத்தை, வீட்டிலேயே வளர்த்து, உணவில் சேர்த்து, ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்