நீரிழிவு வாய்ப்பை குறைக்கும் பொன்னி அரிசி

நீரிழிவு வாய்ப்பை குறைக்கும் பொன்னி அரிசி

நீரிழிவு வாய்ப்பை குறைக்கும் பொன்னி
அரிசி

 இந்தியாவில் பல்வேறு வகையான அரிசிகள்
விளைவிக்கப்படுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது பொன்னி அரிசியாகும். சாதாரண
அரிசியில் இருந்து வேறுபடும் இது, விலையும் சற்று அதிகம்தான்.இந்த நிலையில், சர்வதேச அரிசி
ஆராய்ச்சி மையம் செய்துள்ள ஒரு ஆராய்ச்சியில், பொன்னி அரியில்
நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.அதாவது, பொன்னி அரிசியில்
கிலைசெமிக் இன்டெக்ஸ் என்பது குறைவாக இருப்பதும், இதனால், பொன்னி அரிசி சாதத்தை
சாப்பிட்டதும், உணவு மூலமாகப் பெறும் சர்க்கரை, ரத்தத்தில் குறைவான
வேகத்தில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.உலகத்தில் உள்ள 235 அரிசிகளில்
நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பொன்னி அரிசிக்கு சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த
ஆராய்ச்சியின் மூலம் நீரிழிவு பாதித்தவர்கள் மற்றும் பாதிக்க வாய்ப்பு அதிகம்
உள்ளவர்கள் தங்களது ஆரோக்கியத்துக்கு சிறந்த அரிசியை சாப்பிட வாய்ப்பு ஏற்படும்
என்பது உண்மை.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்