உடலில் துர்நாற்றம் மறைய வேண்டுமா? மறக்காம இதை செய்யுங்க

உடலில் துர்நாற்றம் மறைய வேண்டுமா? மறக்காம இதை செய்யுங்க

உடலில் துர்நாற்றம்
மறைய வேண்டுமா? மறக்காம இதை செய்யுங்கவாசனை நிறைந்த சோப்பு, சென்ட், பவுடர் போன்ற உடலின் வெளிப்புற
சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. உடலின்
உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல் போன்ற நிலைகளாலும்
பித்தத்தின் சீற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனாலும் துர்வாடை வியர்வையில்
வரக்கூடும்.உடல் மற்றும் மன அமைதியைத் தந்து பித்தத்தையம் ரத்தத்தின் சுத்தத்தையும்
ஏற்படுத்தும் உணவு வகைகளான கரும்புச்சாறு, நெய், வெண்ணெய், சர்க்கரை கலந்து கடைந்த மோர், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள், பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை, மணத்தக்காளி, வல்லாரை, சிறுகீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிப்பிஞ்ச, பழைய பச்சரிசி, கோதுமை, பச்சைப்பயறு போன்றவை சாப்பிட
வேண்டும்.காரம், புளிப்பு,உப்பைக் குறைக்கவும். பானையில்
வெட்டிவேர் போட்டு ஊறிய தண்ணீரை குடிப்பது நல்லது.

பெண்களின் உடலில் நறுமணம் வீச :கடுக்காய்த் தோல், லோத்திரப்
பட்டை, வேப்பம்
பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, மாதுளம்பட்டை இவற்றை மிகவும் நுண்ணிய
தூளாக்கிக் கொள்ளவும்.இந்தத் தூளுடன் சந்தனத் தூள் மற்றும் முக பவுடர் கலந்து
வைத்துக் கொண்டு பூசிவர பெண்களுக்கு ஏற்படும் உடல் நாற்றம் மறைந்து.உடல்
கமகமக்கும்.

ஆணின் உடலில் நறுமணம் வீச :கடுக்காய்த் தோல், சந்தனத்
தூள், கோரைக்
கிழங்கு, சிறுநாகப்பூ, விளாமிச்சைவேர், வெள்ளை லோத்திரப்பட்டை, ஃபேஸ் பவுடருடன் கலந்து உடலில் பூசிக்
கொள்ள ஆண்களுக்கு வியர்வையால் ஏற்படும் கெட்ட மணம் விலகும்.

அக்குள் நாற்றம் மறைய :அக்குள் நாற்றம் மறைய கடுக்காய், வில்வபழச் சதை, கோரைக்கிழங்கு, புளி, புங்கன் விதை இவற்றைத் தூளாக்கி
தண்ணீரில் குழைத்து அக்குள் பகுதியில் பூசிய பின் குளிக்க அங்குள்ள கெட்ட மணம்
மறையும்.ஆயுர்வேத மருந்துகளில் ஏலாதி சூரணம் பாசிப்பயறுடன் கலந்து தேய்த்துக்
குளிக்கப் பயன்படுத்தலாம்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.2%
 • இல்லை
  27.88%
 • யோசிக்கலாம்
  4.45%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.47%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்