கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே தான் நம் முன்னோர்கள் அனைத்து உணவிலும் வாசனை பொருளாக இதனை சேர்க்க செய்தனர்.
மேலும் கொத்தமல்லி இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் முகக்கருமை மறையும். அதுமட்டுமின்றி கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைந்து கண்கள் பலம் பெரும்.தினமும் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு பிரச்சனை அனைத்தும் சரியாகும்.