உடலின் ஆரோக்கியம் மேம்பட இயற்கை உணவுகள்

உடலின் ஆரோக்கியம் மேம்பட இயற்கை உணவுகள்

உடலின் ஆரோக்கியம்
மேம்பட இயற்கை உணவுகள்

உலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது
உணவு. அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும்.
ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும்
ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும்
எடுத்துக்கொள்வதும் தவறானது.

காலயில் எடுத்துக் கொள்ள வேண்டிய
சில எளிய சத்தான உணவுகளுக்கான டிப்ஸ்:

·        காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள்
இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து
(ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து
குடிக்கலாம். கடின உடல் உழைப்பு செய்பவர்கள், இதனுடன்
சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, உடல் வலு பெறும்.

·        இஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு
எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து
சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு
கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும்.செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண்
உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.

·        100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு
போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு
ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில்
மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு
இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.

  


Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்