பாகற்காய் இலையின் சாற்றினை ஒரு அவுன்ஸ் எடுக்கவும். வறுத்துப் பொடித்த சீரகத்தூளை அதனுடன் கலந்து காலை, மாலை என இரு வேளையும் உட்கொண்டால் விஷ ஜீரம் நின்று விடும்.
பாகற்காயின் இலையை அரைத்து, உடல் முழுவதும் தடவி, ஒரு மணி நேரம் ஊறியதும் குளிக்கலாம்.
இதேபோல் 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயானது உணவுப்பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.
பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். தவிர, ஜீரம், இருமல், மூலம், வயிற்றுப்புழு உள்ளிட்டவற்றையும் அகற்றும்.