கடைகளில் விற்கப்படும் உலர்ந்த ஆப்ரிகாட் அல்லது புதிய பிரெஷ் ஆப்ரிகாட்களை வாங்கி அதன் சதைப் பகுதியை நன்கு மசித்து கொள்ளுங்கள். இதனை தழும்புகளின் மீது தடவ வேண்டும். அதற்கு முன் ஆப்ரிகாட் விதையை நீக்கி விடுதல் முக்கியம், ஆப்ரிகாட் எண்ணெய் அல்லது எசென்ஸ் கிடைத்தால் அதனையும் பயன்படுத்தலாம். 15 நிமிடம் சருமத்தில் ஊற விட்டு பின்னர் கழுவி விடவும்.