சுத்தமான மஞ்சள்தூளை நீரில் கரைத்து, அதில் மெல்லிய துணியை நனைத்து எடுத்து காயவைக்கவும். இந்தத் துணியால் கண்களை துடைக்கலாம். இல்லாவிட்டால், வென்னீரில் கல் உப்பை கரைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மீது துடைக்கலாம். மல்லிகை, நந்தியாவட்டை பூக்களை கண்களின் மீது வைத்துக் கட்டி, சில நிமிடம் ஓய்வு எடுத்தாலும் நிவாரணம் கிடைக்கும்.