கல்யாணத்துக்கு முன்னாடி என் இடுப்பு சிம்ரன் மாதிரி அழகாக இருந்தது. இரண்டு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் இடுப்பைச் சுற்றி சதை தொங்குதுங்க’ என்று வருத்தப்படுகிறவரா நீங்கள்…? உங்க பிரச்னைக்கு ஒரே தீர்வு யோகாதான் நாம் சாப்பிடும் உணவிலுள்ள அதிகபட்சமான கொலஸ்ட்ரால்தான் இடுப்பில் மடிப்பு விழ காரணம். இதற்கு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்தாலே போதும். வாரம் ஒரு நாளோ, அல்லது இரண்டு நாளோ வாழைத்தண்டை ஜூஸாகவோ, கூட்டாகவோ சாப்பிட்டு வந்தால் இடுப்பிலுள்ள வேண்டாத சதை, இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.