வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்..!!

வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்..!!

வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்..!!

நமது உடலை சக்தியோடு இயங்க வைக்க உணவு ஒரு முக்கிய பொருளாகும். வேலை அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் உணவின் மீது மிகக் குறைந்த கவனம் செலுத்துகிறோம். வேலைக்கு செல்வதில் தாமதம் இருக்கக்கூடாது என்பதற்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் நாம் உணவு உட்கொள்வதைத் தவிர்த்துவிடுவோம். நாம் உணவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் உடலின் செயல்பாட்டுக்கு உணவு மிகவும் அவசியம்.
வழக்கமான நாட்களில் வழக்கமான உணவு உட்கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் வேலைப்பளு அதிகம் உள்ள நாட்களில் நிச்சயம் உணவு உட்கொள்வதை முதல் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலைப்பளு அதிகமாக உள்ள நாட்களில் ஆரோக்கியமான உணவு உட்கொள்வது கடினமாக தெரியலாம்.
கடைகளில் அல்லது உணவகங்களில் வாங்கும் உணவுகள் பேக்கிங் செய்யப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கும் போது நிச்சயம் அவை உடலுக்கு ஆரோக்கியம் தராது. ஆனால் நீங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ஓடிக்கொண்டே இருந்தாலும் பசி எடுக்காமல் இருக்காது. உங்கள் நேரத்திற்கு ஏற்ற உணவை உங்களால் எடுத்துக் கொள்ள முடியாமல் போகும்போது கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்குத் தேவைப்படலாம். இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை எந்த நேரத்திலும் பின்பற்றலாம்.
உங்கள் பையில் எப்போதும் ஸ்நாக்ஸ் பாக்ஸ் இருக்கட்டும்
உங்கள் கையில் எப்போதும் ஆரோக்கியம் தரும் சிற்றுண்டிகளை வைத்துக் கொள்வதால் பசி நேரத்தில் ஜங்க் உணவுகளின் பின்னால் போக வேண்டாம். உங்கள் விருப்பத்திற்கேற்ப பல சிற்றுண்டி தேர்வுகளை எடுத்துக் கொள்ளலாம் பழங்கள், கிரீக் யோகர்ட், கலவையான உலர் பழங்கள் மற்றும் நட்ஸ், முழு கோதுமை குக்கி, புரோட்டீன் பார், க்ரனோலா போன்றவை சிறந்த சிற்றுண்டி வகைகளாகும்.
உங்கள் உணவை முன்கூட்டியே திட்டமிடுங்கள்
 இந்த திட்டத்தை நீங்கள் பழக்கத்திற்கு கொண்டு வரும்போது பாதி பிரச்சனை தீர்ந்து விடும். ஒவ்வொரு வாரத்திற்கான உணவு அட்டவணையை திட்டமிட்டு அதனை கட்டாயம் பின்பற்றுங்கள். ஒரு வாரத்திற்கான உணவு அட்டவணையை திட்டமிடுவதில் சிக்கல் இருந்தால் ஒரு நாள் முன்பே நாளைய உணவை திட்டமிடுங்கள். உங்கள் அட்டவணையில் ஆரோக்கியமான உணவுகள் நிறைந்தி இருக்கட்டும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com