சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்!

சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்!

சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க சில வழிகள்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுகப்பிரவத்தை விட, சிசேரியன் மூலம் தான் குழந்தை பிறக்கிறது. இப்படி சிசேரியன் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு வயிற்றில் தழும்புகள் மறையாமல் இருக்கும். சில நேரங்களில் அந்த தழும்புகள் கடுமையான அரிப்பை ஏற்படுத்தக்கூடும். சரி, உங்களுக்கு இந்த சிசேரியன் தழும்பை மறைக்க வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரை உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் இங்கு சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் அந்த தழும்பை மறைக்கலாம். ஆனால் உங்களுக்கு சிசேரியன் செய்து சில நாட்களே இருந்தால், உடனே தழும்புகளை மறைக்கும் பணியில் ஈடுபடாதீர்கள்.
சிசேரியன் மூலம் ஏற்பட்ட காயங்கள் குணமாகும் வரை பொறுத்திருங்கள். மேலும் நீங்கள் சிசேரியன் தழும்புகளை மறைக்க எந்த ஒரு முறையை கையாள நினைத்தாலும், முதலில் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். சரி, இப்போது சிசேரியன் மூலம் ஏற்பட்ட தழும்புகளை மறைக்க உதவும் வழிகளைக் காண்போம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் தினமும் இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி வர அதிலுள்ள குணப்படுத்தும் உட்பொருட்கள், அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்து தழும்பை மறைய செய்யும்.
எலுமிச்சை
 எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை தழும்புகளை மறையச் செய்யும். எனவே எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பஞ்சில் நனைத்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி பின் எண்ணெயை தடவ வேண்டும். ஆனால் உங்களுக்கு அப்பகுதியில் ஏற்கனவே அரிப்பு இருந்தால் பயன்படுத்தாதீர்கள், ஏனெனில் இது அரிப்பை இன்னும் அதிகமாகும்.
தேன்
 சிசேரியன் தழும்புகளை மறைக்க உதவும். ஒரு சிறந்த பொருள் தேன். அந்த தேனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், சிசேரியன் தழும்புகளை விரைவில் மறைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com