இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் உலர்ந்த திராட்சை 15, மிளகு 5, ஏலக்காய் 2 சேர்த்து நன்கு அரைக்கவும். அதில் 5 டம்ளர் நீர் சேர்த்து, 3 டம்ளராகும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்ட வேண்டும். தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்து பருகவும். காய்ச்சல் வந்தாலும், வரவுள்ள அறிகுறி இருந்தாலும் பருகலாம். இது உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை தரும்.