தினமும் பனை வெல்லம் உணவில் சேர்ப்பதனால் அதிக நன்மைகள் கிடைக்கும். பனை மரத்திலிருந்து கிடைக்கும் நீரில் வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கும். இந்த நீரிலிருந்து கிடைக்க படுவதுதான் கருப்பட்டி அல்லது பனை வெல்லம். நாம் காலையில் அருந்தும் காபி, டீ பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லம் சேர்ப்பது சாலச்சிறந்தது. இது ஒரு சுவையூட்டிய மட்டும் செயல்படாமல் ரத்த சோகை போன்ற பல பிரச்சினைகளை தீர்க்கிறது.