குழந்தையின் கழுத்து சற்று மேல் நோக்கி இருக்கவேண்டும். இல்லையெனில் உடலில் நீர் ஊற்றும்போது குழந்தையின் வாய்க்குள் நீர் சென்றுவிட வாய்ப்புண்டு. எனவே மனையில் உட்காரும்போதே அதற்கு ஏற்ப உட்காருவது அவசியம். பிறகு குழந்தையின் உடல் கை, கால்கள், தொண்டை இடுக்குப் பகுதிகளில் சோப்பு கொண்டு தேய்த்து மெதுவாக நீரை ஊற்றுங்கள். பிறகு குழந்தையை குப்புற படுக்க வைத்து, பின்பக்க கழுத்து, முதுகுப்பகுதி, கால் பின்புறம் சோப்பு போட்டு இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்க்கும்படி சேர்த்தும், கால்களை சேர்த்து நீர் ஊற்றுங்கள்.