உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை மருத்துவ டிப்ஸ்!

உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை மருத்துவ டிப்ஸ்!

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று தின்றால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகி பலன் கிடைக்கும்.

மூன்று ஏலக்காயை பொடியாக்கி, அந்த பொடி மூழ்கும் அளவிற்கு நெய் ஊற்றி அடுப்பில் காய்ச்ச வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, படுத்தவாறு மூக்கில் இரண்டு சொட்டுகள் விட்டுக் கொண்டால் மூக்கடைப்பு உடனே நீங்கும். 

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று தின்றால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகி பலன் கிடைக்கும்.

சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு, அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்து புளியமரப்பூ சட்னி தயார் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதே போல் இது இருமலுக்கும் நல்லது.

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவர்கள் தினமும் 1  டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். அதே போல், 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, தினமும் குளிக்கும் போது தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும். அதன் பிறகு உடல் புத்துணர்வுடன் இருக்கும்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com