பற்களுக்கு உறுதி தரும் திரிபலா பொடி...

பற்களுக்கு உறுதி தரும்  திரிபலா பொடி...
பல் போனால் சொல் போகும் என்பார்கள். இன்றைக்கு பலருக்கும் பல் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பராமரிப்பு குறைவு மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் பற்பசையும். ஆதலால் நமது பற்களை ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்திருக்க அந்த காலத்தில் பயன்படுத்திய திரிபலா பொடி சிறந்தது. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடித்தான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள்.

மருந்துகளில் அமிர்தம் என்று சொல்லும் திரிபலா உடலில் நோய்கள் அண்டாமல் தீர்க்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது இவை ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது.  பற்க்குழிகள் வராமல் தடுக்கிறது. கடுக்காய் வாய்ப்புண்ணை ஆற்றவும் சொத்தை பல் பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. திரிபலா பவுடரை வீட்டில் தயாரிக்கும் முறை குறித்து ஏற்கனவே கொடுத்துள்ளோம். இயலாதவர்கள் நாட்டு மருந்து கடையில் விற்கும் திரிபலா பவுடரை வாங்கி பயன்படுத்தலாம்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

தலைபாரமா...!

தலைபாரமா...!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்