ஆரோக்கியமான கூந்தலுக்கு அழகு நிபுணர் சொல்லும் ஊட்டச்சத்துக்கள்

ஆரோக்கியமான கூந்தலுக்கு 
அழகு நிபுணர் சொல்லும் ஊட்டச்சத்துக்கள்


நாம் தினமும் சாப்பிடும் உணவு தான் நம் சருமம் மற்றும் முடி என ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் ஆதாரமாய் இருக்கிறது.  அப்படிப்பட்ட உணவை தேர்ந்தெடுத்து உண்ணுவது  மிக முக்கியம்.
இயற்கையான மற்றும் சுத்தமான முறையில் தலைமுடியைப்  பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற  சிகையலங்கார நிபுணர் லூசி வின்சென்ட் இது பற்றி விளக்கமாகக் கூறுவதை பார்ப்போம்:  
“நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து நமது உடலின் இரத்த  ஓட்டத்தையும், உச்சந்தலையின் இரத்த  ஓட்டத்தையும் தூண்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நம்  தலைக்கு மசாஜ் செய்வதின் மூலம் இதை  இன்னும் மேம்படுத்தலாம்.  
தலைமுடி பெரும்பாலும் கெரட்டினிலிருந்து உருவாக்கப்படுகிறது, இது அமினோ அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான கூந்தலைப் பெற வேண்டுமெனில், நாம் அதிகம் சாப்பிட வேண்டிய உணவை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 
1. கொலாஜன்
கொலாஜன் புரதம்,  முடி மற்றும் சருமத்தைப் பராமரிக்கும்  நன்மைகளைக் கொண்டுள்ளது.  நமக்கு ஆரோக்கியமான உச்சந்தலை பகுதி அமைவதற்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும் இது முடி உதிர்தலுக்கு முதன்மைக் காரணமான மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த கனிமத்தை எலும்புகள் கொண்டு சமைக்கப்படும்  சூப்பில் காணலாம். மேலும்  செயற்கை முறையிலும் கொலாஜன் கிடைக்கிறது.

2. MSM (எம்.எஸ்.எம்)
இந்த ஊட்டச்சத்துக்கள் ப்ரோக்கோலி, கீரைகள், பூண்டு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வெங்காயம் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற தாவரங்களிலும் காணப்படுகிறது. 
எம்.எஸ்.எம். அமினோ அமிலத்தில் சிஸ்டைன் அதிகமாக உள்ளது.  இது  தோல் மற்றும் முடி திசுக்களை பராமரிக்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.   காயங்கள் விரைவாக குணமாவதற்கும் ஆரோக்கியமான சருமம், தலை முடி, எலும்புகள் மற்றும்  இணைப்பு திசுக்களுக்கு இது மிகச் சிறந்த சத்து.

Zinc ( துத்தநாகம் ) 
தலைமுடி வளர்ச்சிக்கும், உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கும், தலைமுடியைச் சீராக்குவதற்கும், உச்சந்தலை மற்றும் கேசத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.    
மேலும் உடலிலுள்ள திசு வளர்ச்சி, திசுக்கள் பராமரிப்பு,  ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல், எண்ணெய் சுரக்கும் சுரப்பிகளின் உற்பத்தியை சீராக பராமரிக்கிறது.
சிப்பிகள், மாட்டின்  கல்லீரல் மற்றும் வறுத்த மாட்டிறைச்சி ஆகியவற்றில் துத்தநாகம் அதிகமாக  காணப்படுகிறது.

Protein (புரதம்)
வலுவான தசைகள் போன்ற  பல உடல் செயல்பாடுகளுக்கு புரதம் அவசியம்.  முடியின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. புரத குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று முடி உதிர்தல்.  முடி பெரும்பாலும் புரதம் (கெரட்டின்) என்பதால், மிகக் குறைந்த புரதச்சத்து கொண்ட உணவுகள், நிறமி இழப்பை உண்டாக்கி  நரையை ஏற்படுத்தும். உயர்தர புரதம் நிறைந்த உணவு தலைமுடிக்குப் பல அற்புதங்களைச் செய்யும்.
தினசரி நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற வேர்க்கடலை, முட்டை, பட்டாணி, டோஃபு, வான்கோழி, தயிர், கீரை  பீன்ஸ், பயறு மற்றும் கோழி போன்றவற்றை உணவில்  சேர்த்துக் கொள்ளலாம். 

ஒமேகா -3
நமது உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த ஊட்டமளிக்கின்றன ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள். குறிப்பாக, முடி வளர்ச்சிக்கும் , உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், தலை முடி  உடைவதையும் தடுக்கும். மேலும்  முடியின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். கூடுதல் ஒமேகா -3 க்கு   அக்ரூட் பருப்புகள், மீன்கள், முளைப்பயறு , சிறிய மீன்களான ஆன்கோவிஸ், ஆளிவிதை, சால்மன் மீன்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

வைட்டமின் பி
மிகவும் பிரபலமான ஹேர் சப்ளிமெண்ட் பயோட்டின்.  இது பி வைட்டமின்களில் ஒன்றாகும்.  குறிப்பாகத் தலை முடி அடர்த்திக்கும், முடி பளபளப்பைக் கூட்டவும்  உதவுகிறது.  இந்த சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் முடி உதிர்தல், வலுவிழத்தல் போன்ற அறிகுறி தென்படும்.
பருப்பு வகைகள், ஈஸ்ட், முழு தானியங்கள், வெண்ணெய், முட்டை மற்றும் கல்லீரல் ஆகியவை  வைட்டமின் –பி  நிறைந்த உணவுகள்.

செலினியம்
செலினியம் ரோமக்கால்களை வலுவாக வைக்க உதவும். மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உடலில் போதுமான செலினியம் இல்லையென்றால், அவை குறைவான முடி வளர்ச்சி,  மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இந்த செலினியம் தாது, டுனா மீன்கள் , இறால், பிரேசில் கொட்டைகள், ஹலிபட் மற்றும் மத்தி போன்றவற்றில் அதிகம் காணலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு புரதங்களையோ மற்றும் தாதுக்களையோ எடுத்துக்கொள்வதற்கு முன், நம் உடலில் உள்ள தாதுக்களின் அளவை சோதிப்பது மிகவும் முக்கியம். 
* உதாரணமாக, உங்கள் உடலில் அதிகப்படியான துத்தநாகம் இருக்கும்போது அது தலைவலி, தோலில் தடிப்புகள், மனக் குழப்பம் மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். 
* மேலும், அதிக செலினியம் உட்கொண்டால் அது  உடையக்கூடிய மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு வழிவகுக்கும். எனவே நம் அன்றாட  உணவில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும்  மருத்துவரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்