கர்ப்பிணியின் மனக் குமுறல்

கர்ப்பிணியின் மனக் குமுறல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்னால் மறக்க முடியாத ஒரு மாதமாக அமைந்தது. தாய்மை என்ற புதிய பொருப்பு கிடைக்கப் பெற்றேன். என் சந்தோஷத்திற்கும், உற்சாகத்திற்கும் எல்லையே இல்லை. பெரும்பாலான இந்திய குடும்பங்களைப் போலவே, மூன்று மாதத்திற்கு பிறகு தான் என் சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். 

நான் எனது 30வயதில் கர்ப்பம் தரித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நல்ல செய்தியை கேட்பதற்கு நானும் என் கணவரும் நீண்ட காலமாக முயற்சித்து வந்தோம். நான் கருத்தரித்திருக்கிறேன் என்ற செய்தியை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன், கொரோனா அச்சம், ஊரடங்கு என்று நிலைமை வேறு கோணத்திற்கு மாறியது. என் சந்தோஷங்கள் அனைத்தும், தலைகீழானது.

கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் தான் நான் தொடர்ந்து வாழ்கிறேன். என் கணவர் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் நான் பீதியடைகிறேன். அவர் வைரசால்  பாதிக்கப்பட்டு விடுவாரோ அதனால் நானும் பாதிக்கப்பட்டு என் கருவிலிருக்கும் குழந்தைக்கும் பிரச்சினையாகிவிடுமோ என்று  அஞ்சுகிறேன். என்னை ஆறுதல் படுத்தி, தேற்றிவிடக் கூட என் நண்பர்கள் அருகில் இல்லை.
கர்ப்ப காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என வாரம் ஒரு முறை மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன். நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அதிகம் வெளியே செல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிமையாக சமைக்கிறேன். பெரும்பாலான நாட்களில் மேகி மட்டுமே என் பிரதான உணவு.
என்னுடைய இந்த கர்ப்ப காலம் மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எல்லாம் தலைகீழாய் மாறும் என்று நினைக்கவில்லை. கார்ப்ப கால உடை அணிந்து என் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கலாம், உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக பேசி சிரிக்கலாம் என்று பல கற்பனைக் கனவுகள் இருந்தது. ஆனால் நிஜம் வேறு மாதிரி உள்ளது. 

வாட்சப்பில் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பேச்சு, மீம்ஸ் எல்லாமே கொரோனோ பற்றியே உள்ளது. இந்த மாதிரியான செய்திகள் என்னை இன்னும் பீதியடைய செய்கிறது. இவர்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான், இப்போதைக்கு எனக்கு தேவைப்படுவது அன்பான ஆறுதலான வார்த்தைகள் மட்டும் தான். ஆகஸ்ட் மாதத்தில் நல்ல ஆரோக்கியமான, அழகான ஒரு குழந்தையை நான் பெற்றேடுப்பேன். இப்போதைக்கு அந்த எண்ணம் மட்டுமே எனக்கு உள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்