வேப்பிலை சட்டினி

வேப்பிலை சட்டினி

வேப்பிலை உடலுக்கு அதீத நன்மைகளை வழங்குகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகளை குறைக்க உதவுகிறது. மேலும், இதயம், கல்லீரல், கண்பார்வை மட்டுமல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த வேம்பானது, அல்சர், தோல் நோய்கள் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

இப்படி மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பிலையை யாரும் விரும்பி உட்கொள்வதில்லை, காரணம் அதன் கசப்புத் தன்மை. வேப்பிலையை சட்னியாக உட்கொண்டால் எப்படி இருக்கும்? பிரபல ஊட்டச் சத்து நிபுணர் ருஜூடா திவாகரின் தாயார் ரேகா திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருவேப்பிலை சட்னி செய்வது பற்றி பகிர்ந்துள்ளார். 

தேவையான பொருட்கள்

10 வேப்பிலை

2 ஸ்பூன் வெல்லம்

3-4 கொடும்புளி (மருத்துவ குணம் நிறைந்தது, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

1/2 ஸ்பூன் ஜீரகம்

தேவையான அளவு உப்பு

செய்முறை.

வேப்பிலையை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின், மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சிம்பிளான வேப்பிலை சட்னி தயார்.

கசப்புத் தன்மை குறையவேண்டும் என்பதற்காக மட்டும் வெல்லம் சேர்க்கப்படவில்லை. இயற்கையிலேயே வெல்லத்தில், இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. செரிமானத்திற்கும் உதவுவதுடன், உடலில் சேர்ந்துள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது.

இந்த சட்னி பற்றி ரேகா திவாகர் குறிப்பிடும் போது, நோய் எதிர்ப்பு சக்திக்கு உகந்தது வேப்பிலை, எனவே, தினமும் காலை சிறிதளவு வேப்பிலையை உட்கொள்ளுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள் என்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்