கைகளை முகத்தில் வைக்க கூடாது.. என்ன சொல்கிறது ஆய்வு?

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர பாதுகாப்பு உத்திகளை கையாண்டு வருகின்றன. கொரோனா வைரஸ்  உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கைகளால் முகத்தை தொடக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் போர்ட்லாந்து நாட்டில் உள்ள ஆரிஜன் ஹெல்த் அண்ட் சைன்ஸ் பல்கழைக்கழகம் நடத்திய ஆய்வு அனைவரையும் விழிப்படைய செய்துள்ளது.

வைரஸ் தொற்றுகள் காது, மூக்கு, வாய் வழியாகவே உடலுக்குள் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றுகள் அதிகமாக நம் கைகளின் வழியாகதான் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைகளால் கண்ணை தொடக் கூடாது, வாயில் கை வைக்காதீர்கள் என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்ததாக ஆய்வின் தலைவர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஒருவர் மணிக்கு 23 முறை முகத்தில் கை வைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற காலகட்டத்தில் முகத்தில் இத்தனை முறை கைவைப்பது ஆபத்து எனவும் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்