நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 3 பானங்கள்...!

இந்தியாவில் 7.70 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லட்சக்கணக்கான மக்கள் முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருத்துவம் மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டு முறைகளும் அவசியம்.
கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் பானங்களை அருந்தக் கூடாது. கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கும். கலோரி குறைவாக இருக்கும் பானங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தமுடியும்.
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பானங்கள்:
கிரீன் டீ- நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய உடல் பருமன், இதய வால்வுகள் தொடர்பான பிரச்னைகளுக்கும் கிரீன் டீ மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு 6 கப் கிரீன் டீ எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
பிளாக் காஃபி- ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பிளாக் காஃபி மிகவும் நல்லது. பால், சர்க்கரை இல்லாமல் தினமும் மூன்று வேளை பிளாக் காஃபி எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
காய்கறி சாறு- நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறு உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக காய்கறி சாறு அல்லது தக்காளி சாறு எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இளம் வயதில் கூட தலை வழுக்கை ஆவது ஏன்?
