நீங்கள் தர்ப்பூசணி பிரியரா? ஜாக்கிரதை !

நீங்கள் தர்ப்பூசணி பிரியரா? ஜாக்கிரதை !

நீங்கள் தர்ப்பூசணி பிரியரா? ஜாக்கிரதை

குளுகுளு பனி எல்லாம் கடந்து இப்பொழுது சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்டது.கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க  வீடுகளில் ஏசி இருந்தாலும் வெயிலில் வெளியே செல்லும்போது வெயிலை சமாளிக்க உதவுவது தண்ணீரும், பழச்சாறுகளும் தான்.

தற்போது தர்பூசணி வரவு அதிகரித்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழத்தை ஆசையுடன்  வாங்கி சாப்பிடுகின்றனர்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாட்டு பழங்களை விட ஹைபிரிட் வகைகளே அதிகளவில் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.  ஒரு சில விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை கவர்ந்திட  நாட்டு பழங்களில்    'பீட்டா எரித்ரோசின்' என்ற ரசாயனத்தை ஊசியால்  உள்ளே செலுத்தி அதன் நிறத்தை செக்க சிவந்த நிறத்திற்கு மாற்றிவிடுகின்றனர்.

இந்த சிவப்பு நிறம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் வாடிக்கையாளர்களும், விளைவுகள் தெரியாமல் வாங்கி விடுகின்றனர்.உண்மையில் 'பீட்டா எரித்ரோசின்' ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடும்போது புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு எனப் பல நோய்கள் உண்டாகும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 இதனால் உங்களுக்கு பிடித்தமான தர்ப்பூசணி  பழத்தை நினைத்தால் பயம் ஏற்படுகிறதா? ஆனாலும் உங்களுக்கு  கவலை வேண்டாம்...

ரசாயனம் கலந்த பழத்தை  எளிதாக கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. அதாவது, தர்பூசணி பழத்தின் கீற்றுகள் இயற்கையாகவே மங்கலான சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால் ரசாயனம் கலந்த தர்ப்பூசணி பழத்தின் கீற்றுகள்  பளபளவென காட்சியளிக்கும்.

ரசாயனம் செலுத்தப்படாத தர்பூசணி, வெளிறிய பகுதியிலிருந்து கீற்றுவரை செல்லசெல்ல நிறம் சற்று அதிகமாகிக் கொண்டே இருக்கும். ஆனால் ரசாயனம் செலுத்தப்பட்ட தர்பூசணி கீற்று முழுவதும் அடர்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும்.இதை வைத்தே நீங்கள் வாங்க இருக்கும் பழம் ரசாயனம் கலந்ததா? இல்லையா! என்பதை உடனே தெரிந்துகொள்ளலாம்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com