அதிக சர்க்கரையால் குழந்தையின்மை ஏற்படுமா? ஆய்வில் தகவல்!

சர்க்கரை அதிகம் எடுத்துக் கொண்டால் ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் விந்தணுக்களின் தரம், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறைகளாலும் பாதிக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விந்தணுக்களில் உள்ள RNA fragments அளவுக்கு அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. புகை பழக்கம் இல்லாத 15 ஆண்களை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களை தினமும் 3.5 லிட்டர்கள் கொடுத்துள்ளனர். தொடர்ந்து இதனை குடிக்கும் போது விந்தணுக்களின் இயக்கம் குறைய ஆரம்பித்தது.

ஆனால் இது தீர்க்க முடியாத விஷயமல்ல என்றும், தம்பதிகள் சர்க்கரை அளவை குறைவாக எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்