மைகிறேன் தலைவலிக்கு உடனடி தீர்வு தரும் மருந்துக்கு FDA ஒப்புதல்..!

ஒற்றைத் தலைவலி என்ற மைகிறேன் தலைவலி  எல்லா வகையான தலைவலிகளை காட்டிலும் மிகவும் கடுமையானதாகும். இதனால் வலி மற்றும் அதிக அளவு தொந்தரவுகள் ஏற்படக்கூடும். இந்த தலைவலி பெரும்பாலும் பல மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்கு நீடித்து, ஒருவரின் இயல்பு வாழ்க்கையை திக்குமுக்காட செய்கிறது. இதற்காக பல மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் முயற்சி செய்தாலும் அவை எல்லாம் தோல்வியிலேயே முடிகின்றன. 

இந்நிலையில் தற்போது இந்த ஒற்றை தலைவலிக்கு உடனடியாக தீர்வு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மருந்துக்கு FDA ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த திங்களன்று FDA வெளியிட்ட அறிவிப்பில், ஒற்றைத் தலைவலி என்கிற மைகிறேன் சிகிச்சைக்கு Ubrogepant (பிராண்ட் Ubrelvy) மாத்திரைகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுராஸுடன் இல்லாமல் நிகழும் ஒற்றைத் தலைவலிக்கு இந்த மருந்தை பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உப்ரெல்வி நிறுவனம் நடத்திய சோதனையில் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பெரியவர்கள் பங்கேற்றனர் என்றும் இந்த மருந்தை ஒற்றைத் தலைவலியின் போது உட்கொண்ட பல பாதிக்கப்பட்டவர்கள் வலி குறைவதையும்,  சில நேரங்களில், இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையான நிவாரணத்தை அனுபவித்ததாகவும் FDA தெரிவித்துள்ளது.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

வேப்பிலை சட்டினி

இஞ்சி

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்