கேரட்டில் 10 அறியப்படாத ஆரோக்கிய ரகசியம்!

கேரட்டில், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் கேரட் சாப்பிடுவதன் மூலம், ஆற்றலை பெறலாம். மேலும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும்.ஜூசாக சாப்பிடுவதைவிட அப்படியே லேசாக வேகவைத்து கடித்து சாப்பிடுவது நல்லது.
1. பார்வை மேம்படும்:
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இது வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, கண்புரை வராமல் காக்கிறது.
2. புற்றுநோயைத் தடுக்கும்:
கேரட் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரட்டால் உற்பத்தி செய்யப்படும் ஃபால்கரினோல் இயற்கை பூச்சிக்கொல்லி, இது பூஞ்சை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
3. மூப்பைத் தடுத்து இளமையை காக்கும்:
கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் வளர்சிதை மாற்றத்தினால் உடலில் ஏற்படும் உயிரணு சேதத்தை தடுத்து ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதனால் இளமை தோற்றம் தக்க வைக்கும்.
4. சருமத்தை காக்கும்:
முகத்தில் சுருக்கம், முகப்பரு, வறண்ட சருமத்தை தடுத்து, சருமத்துக்கு நல்ல கலரை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
5. தொற்றுநோயைத் தவிர்க்கும்:
உடலில் நோய் தொற்று வராமல் தடுக்கும் என்று மூலிகை மருத்துவர்களால் அறியப்படுகிறது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
7. இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது:
கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமல்லாமல் ஆல்பா கரோட்டின் மற்றும் லுடீன் ஆகியவை உள்ளன. இது இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
8. உடலை சுத்தப்படுத்துகிறது:
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை காக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலை சுத்தம் செய்வதற்கும் கழிவு இயக்கத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது.
9. பற்களைப் பாதுகாக்கிறது:
கேரட்டில் இருக்கும் தாதுக்கள் பல் சேதத்தைத் தடுக்கின்றன. வாய், பற்களையும், சாப்பிட்ட உணவுத் துகள்களைத் துடைக்க உதவும் கேரட்.
10. பக்கவாதத்தைத் தடுக்கிறது:
வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கேரட் சாப்பிடுபவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது குறைவு.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இளம் வயதில் கூட தலை வழுக்கை ஆவது ஏன்?
