நீண்ட நேரம் டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பா? ஆய்வில் தகவல்!

குழந்தைகளின் உடல்நலம் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 4 முதல் 7 வயது வரையிலான 1,480 சிறுவர்களின் வாழ்க்கைமுறை அடிப்படையில் உடல் பருமன் ஏற்படுவதற்கான மூல காரணம் குறித்து ஸ்பெயினை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

உடல் உழைப்பு, டிவி முன் செலவிடும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதே வேளையில் சிறுவர்களின் எடை, உயரம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டன. 

இதில் குறைந்த அளவே வேலைகள் செய்து அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கூறப்படுகிறது. அதே வேளையில் அதிக உடல் இயக்கம் இல்லாமல் இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பதால் சிறுவர்களுக்கு உடல் பருமன் ஏற்படவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமன் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்