கணைய புற்றுநோயை 14 நாட்களில் குணப்படுத்த முடியும்... இஸ்ரேல் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.!

கணைய புற்றுநோயை 14 நாட்களில் குணப்படுத்த முடியும்... இஸ்ரேல் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.!

டெல் அவிவ் பல்கலைக்கழகம் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்பில் பி.ஜே. 34 எனப்படும் ஒரு சிறிய மூலக்கூறுவை தினசரி இரண்டு வாரங்களுக்கு ஊசி போட்ட பிறகு கணைய புற்றுநோய் உயிரணுக்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம் வரை அழிக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கணைய புற்றுநோய் சிகிச்சைக்கு மிகவும் கடினமான புற்றுநோய்களில் ஒன்றாகும். இந்த நோய் கண்டறியப்பட்ட பெரும்பாலானோர் 5 வருடங்களில் உயிரிழந்து விடுகின்றனர். 

இந்நிலையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.  இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்கோடர்கெட் இதழில் வெளியிடப்பட்டது. 

இந்த ஆய்வில் பி.ஜே34 என்ற மூலகூறு நரம்பு வழியாக ஊசி மூலம் செலுத்தினால் உயிரணுப் பிரிவின் போது மனித புற்றுநோய் உயிரணுக்களின் அழிவை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. . நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள எலிகளைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் தினசரி 14 நாட்களுக்கு தினமும் மூலக்கூறு செலுத்தப்பட்டது.. இதனை தொடர்ந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, அந்த புற்றுநோய் கட்டியில் 90 சதவித செல்கள் குறைக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அந்த எலிகளுக்கு புற்றுநோய் கட்டி முற்றிலும் மறைந்துவிட்டது. 

இந்த மூலக்கூறுகள், மனித புற்றுநோய் உயிரணுக்களின் மைட்டோசிஸின் போது ஒரு ஒழுங்கின்மையை ஏற்படுத்துகிறது, அத்துடன் விரைவான உயிரணு மரணத்தையும் நிகழ்த்துகிறது. இதனால் உயிரணு பெருக்கத்தால் சிகிச்சையளிக்கப்பட்ட புற்றுநோய் உயிரணுக்களில் உயிரணு இறப்பு ஏற்பட்டது. அத்துடன் பிஜே34 ஆரோக்கியமான செல்கள் மீது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும், எலிகள் மீது பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனையை மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய போதிய நிதி உதவி கிடைக்கும் பட்சத்தில் 2 ஆண்டுகளில் சோதனை நடத்தப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்