குழந்தைகளுக்கான சத்தான உணவு.. யுனிசெஃப் தயாரித்த உணவுப் பட்டியல்!

குழந்தைகளுக்கான சத்தான உணவு.. யுனிசெஃப் தயாரித்த உணவுப் பட்டியல்!

2016-2018ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து கருத்துக்கணிப்பில் 5 வயதிற்கு கீழ் உள்ள 32% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக தெரியவந்தது. அந்தக் குழந்தைகளில் 40% பெண் குழந்தைகளுக்கும், 18% ஆண் குழந்தைகளுக்கும் அனீமியா தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு யுனிசெஃப் உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உருளைக்கிழங்கு பூரணம் கொண்ட பராதா, ஜவ்வரிசி கட்லெட் இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு, அவல், காய்கறி கலவை கொண்ட உப்புமா ஆகியவை இடம்பெற்றுள்ளன.  அசைவ உணவுகளில் முட்டை, இறைச்சி, மீன் போன்ற புரதம் அதிகம் நிறைந்த உணவுகளை தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நட்ஸ் வகைகள், ஆரஞ்சு, பழங்கள், காய்கறிகள் என ஊட்டச்சத்துக்கள் நிறைவான உணவுகளை குழந்தைகளுக்கு தருமாறு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் அடம் பிடித்தாலும் ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகளை தர வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்