ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் இந்த வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எவ்ளோ நல்லா இருக்கும்னு தோன்றுகிறதல்லவா... இப்படிலாம் நம்ம ஒருபுறம் யோசிட்டு இருக்க, ஜப்பான் நிறுவனம் ஒன்று உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமை செய்து சாதனை படைத்திருக்காங்க. அப்டி என்ன ஸ்பெஷல்? இந்த ஐஸ்கிரீம்ல இருக்குனுதான நினைக்குறீங்க..
ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்ட் ஆன ’செல்லாட்டோ’ தயாரித்த இந்த ஐஸ்கிரீம் இத்தாலி, அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த அரிய வகை வெள்ளை நிற பாசி மிக விலை உயர்ந்தது. எனவே இதனால் தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீமும் அதிக விலையைக் கொண்டுள்ளது. இதில் பார்மிஜியானா ரெஜியானோ மற்றும் சேக்லீஸ் ஆகிய சிறப்பு மூலப்பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஐஸ்கிரீமின் விலை 2 மில்லியன் ஜப்பானிய யென். இந்திய மதிப்பில் இந்த ஐஸ்கிரீமின் விலை ₹5.2 லட்சம் ஆகும்.