பிரியாணிக்கு முதலிடம் - ஸ்விகி நிறுவனம் தகவல்

பிரியாணிக்கு முதலிடம் - ஸ்விகி நிறுவனம் தகவல்
பிரியாணிக்கு முதலிடம் - ஸ்விகி நிறுவனம் தகவல்

ஏழாவது முறையாக தொடர்ந்து பிரியாணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரியாணி வினாடிக்கு 2 ஆர்டர்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது

2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை ஆன்லைன் உணவு விநியோக  நிறுவனமான ஸ்விகி வெளியிட்டுள்ளது. இதுக்குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடப்பாண்டில் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. 

ஏழாவது முறையாக தொடர்ந்து பிரியாணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரியாணி வினாடிக்கு 2 ஆர்டர்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு நிமிடமும் பிரியாணிக்காக 137 ஆர்டர்களை வழங்கியுள்ளார்கள்.

 மேலும் சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் போன்றவை இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள். அதோடு இந்தியர்கள் இந்திய உணவை மட்டுமல்லாது இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன் மற்றும் சுஷி போன்ற உணவுகளையும்  ஆர்டர் செய்துள்ளனர்.

 அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 சிற்றுண்டிகள் பட்டியலில் சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு பொரியல், பூண்டு பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு பூண்டு ரொட்டி மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் போன்றவையுள்ளன. இதில் சமோசா  4 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

இதேபோல் குலாப் ஜாமூன் 2.7 மில்லியன் ஆர்டர்கள், ரஸ்மலை 1.6 மில்லியன் ஆர்டர்கள், சோகோ லாவா கேக் 1 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது.  

இது தவிர ரஸ்குல்லா, சோகோசிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், காஜு கட்லி, டெண்டர் தேங்காய் ஐஸ்கிரீம், டெத் பை சாக்லேட் மற்றும் ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் ஆகியவையும் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com