அந்த மல்லிப்பூ இட்லி இருக்கே.. அத விடுங்க பாஸ்.. உலக இட்லி தினம் கொண்டாட யார் காரணம்?

 அந்த மல்லிப்பூ இட்லி இருக்கே.. அத விடுங்க பாஸ்.. உலக இட்லி தினம் கொண்டாட யார் காரணம்?

மல்லிப்பூ இட்லி, குஷ்பூ இட்லி, சிறுதானிய இட்லி  என பல இட்லி வகைகள் இருந்தாலும், இட்லி தினம் என்று நினைத்தால் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பெயர் கொண்ட இவர்தான்.

தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவாக இட்லி இருக்கிறது. "சவுத் இந்தியன் ஃபுட்" என்று வடநாட்டவர்கள் மனதில் இருப்பது இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 

இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது.இட்லியில் புரதம், நார்ச்சத்து, கார்போ ஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க புகழடைந்த  உணவாக இட்லி இருக்கிறது. 

இப்படிப்பட்ட இட்லிக்காக மார்ச் 30 ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கோயம்புத்தூரைப் 

பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இந்த தினத்தை 2015 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர். ’மல்லிப்பூ’ இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னஸில் இடம்பெற்றார். மேலும் 2000 வகையான இட்லிகளையும்   உருவாக்கியவர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்