கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவானார் !

இந்த வருடத்திற்கான மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார் கர்நாடகத்தின் சினி ஷெட்டி!
கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். பெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
மும்பையில் நேற்று (03.07.2022) இந்த ஆண்டிற்கான பெமினா அழகிகள் போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் மொத்தம் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் முதிலிடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயது இளம் அழகி சினி ஷெட்டி வெற்றிகொண்டு வாகை சூடினார்.
இவர் மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்கிறார், பட்டப்படிப்பு முடித்து பரத நாட்டியம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும், இரண்டு மூன்று இடங்களை ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுஹான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை