இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டுமே 17.7 சதவிகிதம் கார்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்திய கார்களுக்கு மவுசு அதிகரிப்பு !இந்தியாவில் 17.7 சதவிகிதம் கார் விற்பனை அதிகரிப்பு
இந்திய கார்களுக்கு மவுசு அதிகரிப்பு !இந்தியாவில் 17.7 சதவிகிதம் கார் விற்பனை அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டுமே 17.7 சதவிகிதம் கார்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கார் வாங்குவபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.பொதுவாக நடுத்தர குடும்பங்கள் கூட கார்களில் பயணம் செய்வதற்கு விரும்புகிறார்கள். ஹூண்டாய், டாடா, மகேந்திரா, கியா, ஹோண்டா, ரெனால்ட் ,மாருதி சுசுகி போன்ற பல்வேறு கம்பெனிகளின் கார்கள் அதிகளவில்  இந்தியாவில்  விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 7 கார்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனத்தின்  கார்கள் மீதமுள்ள மூன்று இடத்தை பிடித்துக் கொண்டுள்ளன. 

மாருதி ஆல்டோ (18260 கார்கள்), ஸ்விப்ட் (17180 கார்கள்), வேகன்R (17165 கார்கள்), பலேனோ (16648 கார்கள்) கார்கள்  விற்பனையாகி உள்ளன.அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களின் கார்களின் விற்பனையும் சூடு பிடித்துள்ளன.கடந்த ஆறு மாத காலமாக இந்தியாவில் கார் விற்பனை ஏறுமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்