தஞ்சாவூர்: பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் சித்திரைப்பெருவிழா தேரோட்டம்
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் சித்திரைப்பெருவிழா தேரோட்டம்

உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று (01-05-2023) காலை 6 மணியளவில் துவங்கியது. பெருந்திரளானப் பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் நின்று போன தேர் திருவிழாவினை மீண்டும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் நடத்தினர். நாளடைவில் தேரோட்டம் நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை தஞ்சை பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2015ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் தேர்திருவிழா தொடங்கி நான்கு ராஜவீதிகளில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இடையில் கொரோனா காலமான 2020 மற்றும் 2021 இரு ஆண்டுகள் மட்டும் தேர்திருவிழா நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டு, தற்போது கடந்த ஆண்டு முதல் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 17ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரைத் திருவிழா 18 நாட்கள் நடத்தப்படுகிறது. நாள் தோறும் தஞ்சை பெரியகோவில் காலை -மாலை தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம். கொடியேற்றப்படட பதினைந்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. தேரில் அருள்மிகு தியாகராஜர், அருள்மிகு கமலாம்பான் தேரில் வீற்றிருக்கப் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இன்று காலை திங்கட்கிழமை 6 மணியளவில் இழுத்தனர்.

தேருக்கு முன்னால் அருள்மிகு விநாயர் மற்றும் தெய்வானை உடனுறை சுப்ரமணியர் வீதிஉலா செல்ல, தேருக்குப் பின்னால் அருள்மிகு நீலோத்பாலாம்பாள் மற்றும் அருள்மிகு சண்டிகேசுவரர் ஊர்வலமாகச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து மேலராஜவீதியிலிருந்து வடம் பிடிக்கப்பட்ட தேர் வடக்கு ராஜவீதி, கீழுராஜவீதி மற்றும் தெற்கு ராஜவீதிகள் வழியாக வந்து தேரோட்டம் நிறைவு பெறுகிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்தால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் என மாவட்டம் நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com