மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரைத்திருவிழாவின் 11வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் கோஷங்களை எழுப்பியப்படி தேரை வடம் பிடித்து எழுத்தனர். இதில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருக்கல்யாணத்தைக் காண முடியாத பக்தர்களுக்கு சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளி காட்சி அளித்தது கண்கொள்ள காட்சியாக இருந்தது.
மேலமாசி வீதி, கீழ மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய வீதிகளில் தேர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் வெளி ஊர்களுக்கு இருந்து மதுரை வந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.