விழுப்புரம் : கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி - 10 பேர் கவலைக்கிடம் - நடந்தது என்ன?

16-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சிகிச்சை பெறுபவர்
சிகிச்சை பெறுபவர்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தனர்.

இந்த தகவல் அக்கம் பக்கம் பகுதி முழுவதும் பரவியது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பலர் அவ்வப்போது வந்து கள்ளச்சாராயம் குடித்துவிட்டு செல்வது வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று வாரத்தின் கடைசிநாளான சனிக்கிழமை என்பதாலும், சம்பள நாள் என்பதாலும், நேற்று வழக்கத்தைவிட அதிக அளவு நபர்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.

இதில், கள்ளச்சாராயம் குடித்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) ஆகியோர் திடீரென உயிரிழந்துள்ளனர். மேலும் 16க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கள்ளச்சாராயம் விற்ற அமரன் என்பவரை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com