"வந்தே பாரத்" ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் - என்ன காரணம்?

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால் பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில், வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது, 50 சதவீதத்திற்கும் குறைவாகவே முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில், இனி வரும் காலத்தில் செகந்திராபாத் - திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயிலுக்கு பதிலாக, வரும் காலத்தில், தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com