தூத்துக்குடி மாவட்டம் பாளையங்குறிச்சி கோவில் திருவிழாவையொட்டி, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில், இன்று முதல் 14-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறபித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி. செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் அருள்மிகு வீரசக்கதேவி கோயில் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி, இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும் மற்றும் திருவிழாவில் கலந்து கொள்ள வருவோர் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவில் இருந்து, பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, தற்போது கோடை காலம் என்பதால், சுற்றுலா வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'கூட்டங்கள் அல்லது அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால், அது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
மேலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது' என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி. செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.