திருச்சி அருகே தன்னிடம் டியூசன் படித்த மாணவனுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியையே காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ளது வலையப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது பகுதியைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார் தேவி. இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அந்த மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், இரவு நேரங்களில் ஆசிரியை தேவியுடன் அந்த மாணவர் நள்ளிரவு வரை பேசி வருவதும், அந்த மாணவருக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுப்பதும் மாணவரின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இது குறித்து, புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 10-ம் வகுப்பு மாணவர், திருச்சியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.