திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மணல் ஏற்றி சென்றச் சென்ற லாரியின் சக்கரத்தில், இளைஞர் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்துள்ள சொரக்கல்நத்தம் சென்றாயன் வட்டத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் உதயவசந்த் (20) இருசக்கர வாகனதில் நாட்றம்பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரி மீது, இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி உதயவசந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் உதய்வசந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.