திருப்பத்தூர்: தயார் நிலையில் 3 கும்கி யானைகள் - என்ன பிரச்னை?

கும்கி யானை
கும்கி யானை

திருப்பத்தூர் மாவட்டத்தில், பீதி ஏற்படுத்திய காட்டு யானைகளை விரட்ட வனத்துறை சார்பில், கும்கி யானைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கிற கும்கி யாணையும் முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என மொத்தம் மூன்று கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டது.

கடந்த 6 நாட்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்திய காட்டு யானைகளை விரட்ட தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு ஆந்திரா காட்டு எல்லை பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து நாற்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா, தலைமையில் வனத்துறை காவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து தினந்தோறும் இரண்டு காட்டு யானைகளையும் காட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மாலை நேரத்தில் காட்டுப்பகுதிக்குச் செல்லும் காட்டு யானைகள் மீண்டும் காலையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி அருகே இருக்கும் ஏரிகளில் குளித்து நீராடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன.

திருப்பத்தூர் அடுத்த அன்னாண்டிப்பட்டி ஏரியிலிருந்து மாலை விரட்டியடிக்கப்பட்ட இரண்டு காட்டு யானைகள் இன்று மீண்டும் திருப்பத்தூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழருவி பகுதிகளில் சுற்றித்திரிந்து அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com