திருப்பத்தூர்: ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த நபருக்கு அறங்காவலர் பதவியா? - பொதுமக்கள் சாலை மறியல்

ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியவர்களை ஏமாற்றிவிட்டு திருப்பத்தூரில் செட்டில் ஆகிவிட்டார் பழனி
சாலை மறியல்
சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில், ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த நபரை கோவில் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதுப்பேட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் பழனி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். திடீரென ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியவர்களை ஏமாற்றிவிட்டு திருப்பத்தூரில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்த நிலையில், புதுப்பேட்டை பகுதி ராஜா வீதி தெருவில் உள்ள அருள்மிகு திருநாராயணசாமி திருக்கோவிலுக்கு, அறங்காவலராக பழனி நியமிக்கப்பட்டார்.

இந்த தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் சாலையில், அறங்காவலர் பதவியில் இருந்து பழனியை நீக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல்துறையினர் மற்றும் தாசில்தார் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி கூறியதன் காரணமாக அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com