கேரளாவை கலக்கிய தமிழக கொள்ளையர்கள் - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் குறித்த தகவல் கிடைத்தது
போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன்
போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன்

கன்னியாகுமரி மாவட்டம் கடையால்மூடு பகுதியில் கடையின் ஷட்டரை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மாலிக். இவர் கடையாலுமூடு சந்திப்பில் செல்போன் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், இவரது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த புதிய விலை உயர்ந்த 16 செல்போன் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது.

இதனையடுத்து, கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் கொள்ளையர்கள் இருவர் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் பாறசாலை போலீசார் பல்வேறு கொள்ளை திருட்டு வழக்கு சம்பந்தமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டதில் உள்ள எபி (22), ரஞ்சித் ( 18 ) , அனந்து ( 20 ) , விஷ்ணு ( 20 ,) ஆகிய 4 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், இவர்கள் குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியில் உள்ள மொபைல் விற்பனை கடை உட்பட திருவனந்தபுரத்தின் பல்வேறு மொபைல் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக இது போன்ற மொபைல் விற்பனை கடைகளை மட்டுமே குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து ஏராளமான மொபைல் ஃபோன்கள் கைப்பற்றிய போலீசார் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com