தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், மொத்தம் 90.93 சதவீதம் மாணாக்கர் தேர்ச்சி பெற்றனர்.
2023-ம் கல்வியாண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 13 -ம் முதல் ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 90.93 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் செலுத்தாமல் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.