ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த சுராஜ் திவாரி என்ற இளைஞர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய பணியாளா் தோவாணையம் சாா்பில், முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தோவு என 3 கட்டங்களாக நடைபெறும்.
முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதே மாதம் தோ்வு முடிவு வெளியானது. முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பா் 6-ம் தேதி முடிவு வெளியானது.
இறுதித் தோ்வான ஆளுமைத் தோ்வு கடந்த 18-ம் தேதி நடைபெற்று, இதன் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில், 933 பேர் வெற்றி பெற்றனர்.
பொதுப் பிரிவில் 345 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் 99 போ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 263 போ், பட்டியலின வகுப்பினா் 154 போ், பழங்குடியினா் 72 போ் என மொத்தம் 933 பேர் வெற்றி பெற்றனர். இதில், 41 போ் மாற்றுத்திறனாளிகள். இதில், மணிப்பூரைச் சேர்ந்த சுராஜ் திவாரியும் ஒருவர்.
கடந்த 2019-ம் ஆண்டு காசியாபாத் நகரின் தாத்ரி பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சுராஜ் திவாரி தனது வலது கை, இடது கையில் இரண்டு விரல்கள், இரண்டு கால்கள் ஆகியவற்றை இழந்தார்.
ஆனாலும், தன்னம்பிக்கையுடன் குடிமைப் பணித் தேர்வுக்குப் படித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சுராஜ் திவாரியின் வெற்றி குறித்து அவரது தந்தை ரமேஷ் குமார் கூறுகையில், 'வெற்றிக்கு வெறும் 3 விரல்களே போதுமானது' என ஆனந்த கண்ணீர் விட்டார்.
சுராஜ் திவாரியின் வெற்றியை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல, அம்மாநிலத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு சுராஜ் திவாரிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.