கள்ளச் சந்தையில் மது விற்பனை - 7 பேர் சஸ்பெண்ட் - சிக்கியது எப்படி?

டாஸ்மாக் ஊழியர்கள் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகின்றனர் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்மாக் கடை
மாஸ்மாக் கடை

சந்துக்கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை டாஸ்மாக் கடையின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், காவல்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதியமான் கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக சந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் காவல்துறை துறையினர் மற்றும் டாஸ்மார்க் மேலாளர் விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

விசாரணை மேற்கொண்டதில் அரசு மதுபான கடை 2821 என்ற கடையில் பணிபுரியும் கோவிந்தன் மற்றும் முருகள் ஆகிய 2 சூப்பர்வைசர்களும், சதாசிவம், சரவணன், ராமதாஸ், திருமால், தீர்த்தராமன் உள்ளிட்ட 7 பேரும் சந்து கடைகளுக்க மது விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேரையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

- பொய்கை.கோ. கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com