தமிழகத்தில், மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி நிறைவு பெற்றது. 12-ம் வகுப்பு தேர்வை, 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 4 லட்சத்து 33 ஆயிரம் மாணவிகளும், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் எழுதினர். ஆகமொத்தம் 8.50 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை பொய்யாமொழி நாளை காலை 9.30 மணியளவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்திலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.