பான் - ஆதார் இணைப்பு: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க முடியாதவர்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பான் - ஆதார் இணைப்பு
பான் - ஆதார் இணைப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று 2017 -ம் ஆண்டு ஜூலை 1 -ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, பல முறை அதன் காலக்கெடு நீடிக்கப்பட்டது. இறுதியாக 2023 -ம் ஆண்டு ஜூன் 30 -ம் தேதி உடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், அதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 30 -ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அனைவரும் பான் - ஆதார் எண்ணை இணைப்பது சாத்தியம் இல்லை. பலரும் இணைப்பை சரியான நேரத்தில் இணைக்க முடியாததால், கடைசி நாளான அன்று போட்டிபோட்டு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்து வந்தது. ஆனால், இது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

ஆனால், வருமான வரித்துறை வெள்ளிக்கிழமை அன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ஆதார் இணைப்புக்கான கட்டணம் செலுத்திய பிறகும், சலான்களை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை என புகார் எழுந்தது.

ஆனால், பான் எண்ணில் ஆதார் இணைத்தவர்கள் சலான் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

பான் எண் வைத்திருப்பவர் பணம் செலுத்தியதும், சலான் நகலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2023 -ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு அடுத்து, ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க முடியவில்லை என்றால், வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்திய பின்னர் இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com