பெற்ற குழந்தையை ஏரியில் வீசிய தாய் - கைது செய்த போலீஸ் - என்ன நடந்தது?

கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை சங்கீதா ஏரியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றது காவல்துறையில் விசாரணையில் தெரிய வந்தது
பெற்ற குழந்தையை ஏரியில் வீசிய தாய் - கைது செய்த போலீஸ் - என்ன நடந்தது?

பெற்ற குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த கொடூர மனம் கொண்ட தாயை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சங்கீதாவுக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சாதாரண நட்பு இருந்து வந்தது. நாளடைவில், அது கள்ளக் காதலாக மாறியுள்ளது. இதனால் சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் அடிக்கடி அவரை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்தார்.

கர்ப்பம் அடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் அதை கலைக்க முடியாது என்பதை அறிந்த சங்கீதா, வேறு வழியில்லாமல் குழந்தை ரகசியமாக பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.

ஆனால், தான் கர்ப்பமாக உள்ளதை தனது கணவரிடம் மறைத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று, அவரது கணவர் இல்லாத நேரத்தில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சென்றால் விசயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால், தனது வீட்டு கழிவறையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.

இதில், சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால், கணவர் பிரிந்து சென்றுவிடுவார் என கருதி, தனது வீட்டுக்கு சிறிது தொலைவில் உள்ள ஏரியில் தூக்கி வீசியுள்ளார்.

இதைக்கண்ட அப்பகுதி வாசிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை சங்கீதா ஏரியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதைனையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com