செந்தில் பாலாஜியின் உடல்நிலை - காவேரி மருத்துவமனை சொல்வது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ICU -வில் சிகிச்சை பெற்று வருகிறார்
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

முன்னதாக, நேற்று மாலை முதல் காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் ஓமந்தூரார் மருத்துவமனையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

மேலும், காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை டி.ஜி.பி அமரேஷ் புஜாரி மேற்பார்வையில் சிறைத்துறையினர் செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 9.15 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், பலத்த போலீஸ் பாதுகாப்பு உடன், காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து, அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வந்தனர்.

இந்த நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சையா? அல்லது ஸ்டென்ட் பொருத்துவதா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர்.

மேலும், இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 அல்லது 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், காவேரி மருத்துவ மனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ICU -வில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும்,

இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தம் மற்றும் இ.சி.ஜி பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலையை அவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.

காவேரி மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com